விம்பிள்டன்: பெடரர் சாதனையை சமன் செய்வாரா ஜோகோவிச்?

விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகியவை ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள். இந்த போட்டிகள் அனைத்தும் ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும்.

இந்த நான்கு வகையான போட்டிகளில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனில் இன்று(ஜூலை 3) தொடங்கி ஜூலை 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பலர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் செர்பியா நட்டை சேர்ந்த வீரர் நோவக் ஜோகோவிச் பட்டம் வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பார்க்கப்படுகிறது.

அவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இதுவரை 7 முறை சாம்பியன் பட்டத்தையும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்று சாதனை வீரராக வலம் வருகிறார்.

இந்த முறையும் நோவக் ஜோகோவிச் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றால் அதிக முறை விம்பிள்டன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரின் சாதனையை சமன் செய்வார்.

ரோஜர் பெடரர் இதுவரை 8 முறை விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இந்திய மதிப்பில் ரூ. 464 கோடியாகும். இதில் ஒற்றயைர் பிரிவில் பட்டத்தை கைப்பற்றுபவருக்கு 24.5 கோடி ரூபாயும், இரண்டாவது இடத்தை பிடிப்பவருக்கு 12.25 கோடி ரூபாயும், இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் ஜோடிக்கு ரூ.6.25 கோடி மற்றும் முதல் சுற்றில் தோல்வி அடையும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.57 லட்சம் வழங்கப்பட உள்ளது.

இன்று தொடங்கும் முதல் நாள் போட்டியில் ஜோகோவிச் மற்றும் ஸ்வியாடெக் ஆகியோர் மோத உள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *