டி20 உலகக் கோப்பை: மெளனத்தைக் கலைத்த பும்ரா!

விளையாட்டு

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று (அக்டோபர் 4) நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில், இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து ஜஸ்பிரித் பும்ரா பங்கேற்கவில்லை. அவருக்கு முதுகு வலி இருப்பதால் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகடாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா அணியுடனான டி20 தொடரில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் அணியில் விளையாடி வருகிறார்.

பும்ராவின் முதுகுவலி காரணமாக, அடுத்த மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ள டி20 உலக கோப்பை தொடரிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று (அக்டோபர் 4) அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில், “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு விலக்கியுள்ளது. விரிவான மதிப்பீடு மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா இன்று (அக்டோபர் 4) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “காயம் காரணமாக இம்முறை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் நான் பங்கேற்க முடியாதது வருத்தமளிக்கிறது. உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி. உடல்நிலை சீரானதும் இந்திய அணிக்கு என்னுடைய ஆதரவை அளிப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

ஜெ.பிரகாஷ்

காங்கிரஸ் தேர்தல்: விமர்சித்த பாஜவுக்கு சிதம்பரம் பதிலடி!

இலவச பேருந்துகளில் விரும்பினால் பணம் கொடுக்கலாமா? அமைச்சர் சிவசங்கர் மறுப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *