“இனியும் போராட சக்தி இல்லை” : ஓய்வை அறிவித்த வினேஷ் போகத்

Published On:

| By Kavi

மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக வீராங்கனை வினேஷ் போகத் அறிவித்துள்ளார்.

33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்து வருகிறது.

இந்தப் போட்டியில் பெண்கள் மல்யுத்தத்தில் 50 கிலோ உடல் எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டு ஆகஸ்ட் 6ம் தேதி விளையாடினார்.

உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யு சுசாகியை முதல் சுற்றில் தோற்கடித்தார்.

தொடர்ந்து கால் இறுதிப் போட்டியில் முன்னாள் ஐரோப்பிய சாம்பியனான உக்ரைனை சேர்ந்த உக்சானா விவாச்சையும் , அரை இறுதிப் போட்டியில் பான் அமெரிக்கா சாம்பியனான லோபஸ் யுஸ்னேலிஸ் குஸ்மேனை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இதனால் அவருக்கு வெள்ளி பதக்கம் உறுதியானது.

இந்த சூழலில் இறுதிப்போட்டியில் நேற்று இரவு களம் கண்டு  அமெரிக்க வீராங்கனை சாராவை எதிர்கொள்ள இருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு போட்டிகள் முடிந்து அவரது உடல் எடையை பரிசோதித்து பார்த்ததில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை விட 100 கிராம் எடை அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் விதிமுறைக்கு புறம்பாக அவரது எடை இருப்பதாக கூறி இந்த போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் ஆறுதல் கூறி வந்தனர்.

இந்த சூழலில் இன்று (ஆகஸ்ட் 8) காலை மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெளியிட்ட பதிவு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த பதிவில், “மல்யுத்த போட்டியில் நான் வெற்றி பெற்றேன். இருந்தாலும் நான் தோற்றுவிட்டேன். என்னை மன்னித்துவிடு அம்மா. உங்கள் கனவும் எனது தைரியமும் உடைந்து விட்டன. இனியும் என்னிடம் போராட சக்தி இல்லை. குட்பை மல்யுத்தம் 2001- 2024. உங்கள் அனைவருக்கும் என்றும் நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். மன்னிக்கவும்” என்று பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஹெல்த் டிப்ஸ்: நடைப்பயிற்சி… நில் – கவனி – செல்!

Vinesh Phogat: வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment