50 கிலோ எடைப்பிரிவில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிக்கத் ஜரின் இன்று (ஆகஸ்ட் 7 ) நடந்த இறுதிப்போட்டியில் வடக்கு அயர்லாந்தின் மெக்நால் என்ற வீராங்கனையை வீழ்த்தினார்.
காமன்வெல்த் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டு இருக்கிறது. இன்றைய போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீராங்கனை நிக்கத் ஜரின் முன்னிலையில் இருந்தார்.
5-0 என்ற செட் கணக்கில் அயர்லாந்து வீராங்கனை மெக்நாலை வீழ்த்தியதன் மூலம் இந்தியாவின் சார்பில் 50 கிலோ எடைப்பிரிவில் முதல் தங்கத்தை வென்றுள்ளார் நிக்கத் ஜரின் .

இன்று ( ஆகஸ்ட் 7 ) நடந்த மற்றொரு போட்டியில் 45 முதல் 48 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இங்கிலாந்து வீராங்கனை டேமி ஜேட்டை வீழ்த்தி இந்திய வீராங்கனை நீது கங்காஸ் தங்கம் வென்றார்.
5-0 என்ற செட் கணக்கில் நீது கங்காஸ் வெற்றி பெற்றார். இந்தியா பளுதூக்குதலில், ஜூடோ, டேபிள் டென்னிசில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில் குத்துச்சண்டையில் பதக்கம் பெறவில்லை என்ற குறையை நிக்கத் ஜரின் மற்றும் நீது கங்காஸ் தீர்த்து வைத்துள்ளனர்.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”நிகத் ஜரீன் இந்தியாவின் பெருமை. உலகத் தரம் வாய்ந்த தடகள வீராங்கனையான இவர், தனது திறமைக்காகப் போற்றப்படுகிறார். காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக நான் அவரை வாழ்த்துகிறேன். பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கும் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காமன்வெல்த்: இந்தியாவிற்கு அடுத்த தங்கம், வெண்கல பதக்கங்கள்!