உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு மூன்றாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வரும் உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் இன்று (மார்ச் 26) 50 கிலோ பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நிகத் ஜரீன் வியட்நாம் நாட்டின் நியூயன் தி டாமை எதிர்கொண்டார். போட்டி தொடங்கியதில் இருந்து ஆதிக்கம் செலுத்திய நிகத் 5-0 என்ற கணக்கில் டாமை வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஏற்கெனவே இந்த தொடரில் நீது கங்காஸ் (48 கிலோ), ஸ்வீட்டி பூரா (81 கிலோ) ஆகியோர் தங்கம் வென்ற நிலையில் தற்போது இந்தியாவிற்காக 3வது தங்கப் பதக்கம் வென்றுள்ளார் நிகத்.
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அவர் வென்ற இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இதன்மூலம் மேரி கோமிற்குப் பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட உலகப் பட்டங்களை வென்ற இரண்டாவது இந்திய குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நிகத் ஜரின் பெற்றுள்ளார்.
இதனையடுத்து இன்று நடைபெற உள்ள 75 கிலோ பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன் ஆஸ்திரேலியாவின் கெய்ட்லின் பார்க்கருடன் மோத உள்ளார். இதில் அவர் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவை சந்திக்க டெல்லி செல்லும் எடப்பாடி
மெரினாவில் வயலின் வாசித்த இளைஞர்… தேடி வந்த காவல்துறை!