சச்சினுக்கு அடுத்து கோலி தான்!

விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது.

நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும், மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றது.

இந்நிலையில், நான்காவது போட்டி நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 480 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் சதமடித்து அசத்தினர்.

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்த இந்திய அணியானது 571 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போட்டியில் இன்று ஒருநாள் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 364 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரிகளுடன் 186 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் நேற்று தனது 28-வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து நான் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

அதன்படி நேற்றைய போட்டியின் மூலம் சதம் அடித்த விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 16-வது சதத்தை பதிவு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார்.

சச்சின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மட்டும் 20 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்து விராட் கோலி தான் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 16 சதங்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: வரகுக் கூழ் வற்றல்

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.