காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா இன்றும் (ஆகஸ்டு 7) சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகிறது. தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இங்கிலாந்து, பர்பிங்காம் நகரில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து பதக்கங்களை வென்று வருகிறது.
வெற்றிகள்
வெண்கல பதகத்திற்கான ஹாக்கி போட்டி இன்று (ஆகஸ்ட் 7 ) நடைபெற்றது. இந்திய மகளிர் ஹாக்கி அணி நியூசிலாந்து அணியுடன் விளையாடியது. பெனால்டி ஷுட் அவுட்டில் 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
மகளிர் குத்துச்சண்டை 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை நித்து இங்கிலாந்து வீராங்கனை ரெஸ்டானை எதிர்கொண்டார். 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஆடவர் குத்துச்சண்டை 51 கிலோ எடை பிரிவில் இந்தியாவை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல், இங்கிலாந்து வீரர் மெக்டொனால்டை எதிர்கொண்டார். 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.
காமன்வெல்த்தில் இந்தியா இதுவரை 15 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலம் என 43 பதக்கங்களை வென்றுள்ளது. காமன்வெல்த் தரவரிசை பட்டியலில் இந்தியா 5 ஆவது இடத்தில் உள்ளது
மோனிஷா
குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்குமா?