சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் இன்று (மார்ச் 9) துபாயில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தொடர்ந்து, 14வது முறையாக டாஸில் தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் 68 சதவிகிதம் இந்தியா வெற்றி பெற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கணித்துள்ளனர். இந்த போட்டியை முன்னிட்டு 5 ஆயிரம் கோடி மதிப்புக்கு பெட்டிங் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக வில் யங்குடன் சேர்ந்து ரச்சின் ரவீந்தரா களம் இறங்கினார். முகமது ஷமி இந்திய பந்து வீச்சை தொடங்கினார். newz
முதல் 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி சிறப்பாகவே விளையாடியது. வில் யங் வருண் சக்கரவர்த்தி 15 ரன்கள் எடுத்த போது வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து கானே வில்லியம்சன் ரச்சின் ரவீந்தராவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த சமயத்தில் 37 ரன்கள் எடுத்திருந்த ரச்சின் ரவீந்த்ராவும் குல்தீப் பந்தில் போல்டானார்.
அடுத்து கானே வில்லியம்சன் 11 பந்துகளில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே பிடி கொடுத்து அவுட் ஆனார். அப்போது, நியூசிலந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 75 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து, டரியல் மிட்சல் , டாம்லாதன் ஆகியோர் இணைந்து பொறுமையாக இந்திய பந்து வீச்சை எதிர்கொண்டு விளையாடி கொண்டிருக்கின்றனர்.ea
நியூசிலாந்து அணி 108 ரன்களை எடுத்திருந்த போது, டாம் லாதம் 14 ரன்களில் அவுட் ஆனார். land choose to bat