டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக 4வது முறையாக அணியை வழிநடத்துகிறார் கேன் வில்லியம்சன்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்கின்றன. வரும் மே 1ஆம் தேதிக்குள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ள 20 அணிகளும் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து, ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, டி20 உலகக்கோப்பை தொடருக்கான முதல் அணியாக 15 வீரர்கள் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளது.
அதன்படி கோட் சூட்டில் வந்த ஒரு சிறுமி மற்றும் சிறுவன் அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து அணியை அறிவித்துள்ளனர்.
Join special guests Matilda and Angus at the squad announcement for the upcoming @t20worldcup in the West Indies and USA. #T20WorldCup pic.twitter.com/6lZbAsFlD5
— BLACKCAPS (@BLACKCAPS) April 29, 2024
அதன்படி நியூசிலாந்து அணியின் கேப்டனாக அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இது அவர் வழிநடத்தும் 4வது டி20 உலகக்கோப்பை தொடராகும்.
மேலும் தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக டிரெண்ட் போல்ட், டிம் சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து அணி விவரம்!
கேன் வில்லியம்சன் (கேப்டன்),
ஃபின் ஆலன்
ரச்சின் ரவீந்திரா
டெவோன் கான்வே
மைக்கேல் பிரேஸ்வெல்,
மார்க் சாப்மேன்
டேரில் மிட்செல்
லாக்கி பெர்குசன்,
மாட் ஹென்றி
ஜிம்மி நீஷம்
க்ளென் பிலிப்ஸ்
மிட்செல் சான்ட்னர்
டிம் சவுதி
டிரென்ட் போல்ட்
பயண இருப்பு: பென் சியர்ஸ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா