நேரு உள் விளையாட்டு அரங்கில் ஒலித்த ஏ.ஆர். ரகுமானின் மியூசிக்!

Published On:

| By Jegadeesh

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் , வைரமுத்து , ரஜினி , கார்த்திக் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையில் வெளிவந்த முத்து படத்தின்,

“ ஒருவன் ஒருவன் முதலாளி” பாடலின் மியூசிக் ”தாய் மண்ணே வணக்கம்” பாடலின் மியூசிக்கும் ஒலிக்கப்பட்டது. அப்போது விழா அரங்கமே விண்ணை பிளக்கும் அளவிற்கு கர ஒலி எழுப்பியது.

டானி பாயில் இயக்கத்தில் சிலம்டாக் மில்லியனர் படத்தின் “ஜெய் கோ” பாடலின் மியூசிக்கும் ஒலிக்கப்பட்டது.

மு.வா.ஜெகதீஸ் குமார்-

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share