33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் கோலாகலமாக நடந்து வருகிறது. இந்தியா இதுவரை நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. துப்பாகிச் சுடுதல் போட்டியில் மனு பாக்கர் இரண்டு வெண்கலப் பதக்கங்களும், சரப்ஜோத் சிங் ஒரு வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
பெண்களுக்கான மல்யுத்த போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவின் இறுதிச் சுற்றுக்குத் தகுதியான வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் அதிகமாக இருந்த காரணத்தினால், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தை அடுத்து, இந்த வருடத்துடன் குத்துச் சண்டையிலிருந்து ஓய்வு பெறுவதாகத் தனது எக்ஸ் தள பக்கத்தில் வினேஷ் போகத் அறிவித்தார்.
sarojdevi neeraj chopra
நேற்று (ஆகஸ்ட் 8) நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஸ்பெயின் அணியை வீழ்த்தி ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெண்கலப் பதக்கம் வென்றது.
இன்று (ஆகஸ்ட் 9) அதிகாலை நடந்த ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். தங்கப் பதக்கத்தைப் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமும், வெண்கலப் பதக்கத்தை க்ரேனடா வீரர் ஆண்டர்சன் பீட்டர்ஸும் வென்றனர்.
இந்நிலையில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவரது தாய் சரோஜ் தேவி அளித்த பேட்டியில் “எனது மகன் வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்கம் வென்ற அர்ஷத் நதீமும் எனது மகனை போலதான் பார்க்கிறேன்.
எல்லாரும் கஷ்டப்பட்டுத் தான் போட்டிகளில் பங்கேற்கிறார்கள்” என்றார். போட்டி முடிந்து வீடு திரும்பும் நீரஜ் சோப்ராவிற்குப் பிடித்த இனிப்பைச் செய்து தருவீர்களா? என்று கேட்டதற்கு ” ஆம் அவருக்குப் பிடித்த இனிப்பைச் செய்து தருவேன்” என்று சொன்னார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
இனி வெள்ளித்திரையில் எனக்கு பிரேக் இருக்காது: பிரசாந்த் கான்ஃபிடன்ட்!
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்னிடம் விசாரணை ஏன்? – பால் கனகராஜ் விளக்கம்!
தமிழ்ப் புதல்வன்: நேற்றே வங்கிக்கணக்கில் ரூ.1000… மாணவர்களுக்கு ஸ்டாலின் குட் நியூஸ்!