இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக் மீட்டிங்கில் 89.08 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்து பட்டத்தை வென்றுள்ளார்.
சுவிட்சர்லாந்து லாசேனில் டைமண்ட் லீக் மீட்டிங்க் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
ஒலிம்பிக்ஸ் போட்டியில் தங்கம் வென்ற இந்தியத் தடகள வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் தனது மூன்றாவது முயற்சியில் 89.08 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முதலிடம் பிடித்தார்.
ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜக்குப் வாட்லெஜ்ச் 85.88 மீட்டர் எறிந்து இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் கர்டிஸ் தாம்சன் 83.72 மீட்டர் எறிந்து மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக ஓய்வு எடுத்துக் கொண்டார்.
தற்போது ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
மேலும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சூரிச் நகரில் நடக்கும் டைமண்ட் லீக் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார்.
இதன்மூலம், டைமண்ட் லீக் மீட்டிங் பட்டத்தை வென்ற முதல் இந்தியராக நீரஜ் சோப்ரா திகழ்கிறார்.
மோனிஷா