போபாலில் நடைபெற்ற 6 ஆவது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 6 ஆவது தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.
12 வகையான எடை பிரிவில் இந்தியா முழுவதும் இருந்து 302 வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளனர்.
இதில், 48கிலோ எடை பிரிவில் தமிழக வீராங்கனை கலைவாணி, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த 2019 உலக சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றவரும், இந்தியன் ரயில்வே அணியை சேர்ந்தவருமான மஞ்சு ராணியை எதிர்கொண்டார்.
3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 0-5 என்ற கணக்கில் தமிழக வீராங்கனை கலைவாணி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் கலைவாணி, தேசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியின் அரையிறுதிக்கு தேர்வாகினார்.
ஏற்கனவே, 2 சர்வதேச போட்டிகளில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கலைவாணி, வளர்ந்து வரும் குத்துச்சண்டை வீராங்கனைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளார்.
கலை.ரா
“மராத்தி மொழி பேசும் இடங்களை யூனியன் பிரதேசமாக்கிடுக” – உத்தவ் தாக்கரே கோரிக்கை!
அறிவிப்பு பலகை விழுந்து உயிரிழப்பது கடவுள் செயலா? – நெடுஞ்சாலைத்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!