Video: முஹமது ஷமி, வைஷாலிக்கு ‘அர்ஜுனா விருது’ வழங்கி கவுரவம்!

Published On:

| By Manjula

national sports awards 2023

கிரிக்கெட் வீரர் முஹமது ஷமி, தமிழக வீராங்கனை வைஷாலி ஆகியோருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு அர்ஜுனா விருதினை இன்று (ஜனவரி 9) வழங்கினார். national sports awards 2023

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பங்களிப்பாளர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா இன்று   குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றது. குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இதில் விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ‘மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா’ விருது பாட்மிண்டன் வீரர்கள் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இருவருக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த போட்டியாளர்களுக்கான அர்ஜுனா விருது தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி, கிரிக்கெட் வீரர் முஹமது ஷமி உள்ளிட்ட 26 வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

அர்ஜுனா விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்கள் விவரம்:

1.ஓஜஸ் பிரவின் தியோடலே (வில்வித்தை)
2.அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை)
3.ஸ்ரீசங்கர் எம் (தடகளம்)
4.பருல் சவுத்ரி (தடகளம்)
5.முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை)
6.ஆர் வைஷாலி (சதுரங்கம்)
7.முகமது ஷமி (கிரிக்கெட்)
8.அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்)
9.திவ்யகிருதி சிங் (குதிரைச்சவாரி ஆடை)
10.திக்ஷா தாகர் (கோல்ப்)
11.கிரிஷன் பகதூர் பதக் (ஹாக்கி)
12. புக்ரம்பம் சுசீலா சானு (ஹாக்கி)
13.பவன் குமார் (கபடி).
14. ரிது நேகி (கபடி)
15.நஸ்ரீன் (கோ-கோ)
16.பிங்கி (புல்வெளி கிண்ணங்கள்)
17. ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (தூப்பாக்கி சுடுதல்)
18. இஷா சிங் (தூப்பாக்கி சுடுதல்)
19.ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்)
20.அய்ஹிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்)
21.சுனில் குமார் (மல்யுத்தம்)
22.ஆன்டிம் (மல்யுத்தம்)
23. நௌரெம் ரோஷிபினா தேவி (வுஷு)
24.ஷீத்தல் தேவி (பாரா வில்வித்தை)
25.இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்ற கிரிக்கெட்)
26.பிராச்சி யாதவ் (பாரா கேனோயிங்).

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: தமிழக அரசு அறிவிப்பு!

அதிமுக வாக்குகளை நீக்க திமுக சதி: ஜெயக்குமார்

national sports awards 2023

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share