36ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் பதக்க தரவரிசை பட்டியலில் தமிழகம் 24 தங்கப்பதக்கங்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளது.
36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதியாக 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. பின்னர் 7 ஆண்டுகள் இடைவேளைக்குப் பிறகு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்திநகர், சூரத், வதோதரா, ராஜ்கோட் மற்றும் பாவ்நகர் உள்ளிட்ட ஆறு நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டியில் 28 மாநில வீரர்கள், எட்டு யூனியன் பிரதேச வீரர்கள், இந்திய ஆயுதப் படை அணி வீரர்கள் என சுமார் 7,000 விளையாட்டு வீரர்கள் 36 வெவ்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்த போட்டிகளின் பதக்க தரவரிசை பட்டியல் தினசரி வெளியாகி வருகிறது.
நேற்றைய (அக்டோபர் 11) தரவரிசை பட்டியலின் நிலவரப்படி தமிழகம் 24 தங்கப்பதக்கங்களுடன் 5 ஆம் இடத்தில் உள்ளது.
தமிழக வீரர்கள் 21 வெள்ளி பதக்கங்களையும், 25 வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளனர்.
53 தங்கப்பதக்கங்களுடன் சர்வீஸ் ஸ்போர்ட்ஸ் கண்ட்ரோல் போர்டு அணி முதலிடத்திலும், 34 தங்கப்பதக்கங்களுடன் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், 32 தங்கப்பதக்கங்களுடன் ஹரியானா மூன்றாம் இடத்திலும் 26 தங்கப்பதக்கங்களுடன் கர்நாடகா நான்காம் இடத்திலும் உள்ளன
அண்டை மாநிலமான கேரளா 19 தங்கப்பதக்கங்களுடன் 7 ஆம் இடத்தில் உள்ளது.
மோனிஷா
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
நேரக் கட்டுபாடு : பட்டாசு வியாபாரிகள் கடிதம் அனுப்பி போராட்டம்!