Rajasthan won the match in the last ball against KKR

போட்டி போட்டு சதமடித்த நரைன் – பட்லர் : கடைசி பந்தில் வென்ற ராஜஸ்தான்!

விளையாட்டு

KKR vs RR : கொல்கத்தா அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி.

ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 16) நடைபெற்ற 31வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

சுனில் நரைன் அபார சதம்!

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரைன் 6 சிக்சர், 13 பவுண்டரிகளுடன் அபார சதம்(109) அடித்தார். ஐபிஎல் தொடரில் இது அவருடைய முதல் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளுக்கு 223 ரன்கள் குவித்தது.

 

இதனையடுத்து 224 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் அணி.

கொல்கத்தா அணியில் சுனில் நரைன் என்றால் இங்கு ஜோஸ் பட்லர். தொடக்க வீரராக களமிறங்கிய அவர் அடிக்கடி பேட்டை சுழற்றி வாணவேடிக்கை காட்ட, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

8வது ஓவரில் 97 ரன்களுக்கு 3 விக்கெட் என்று இருந்த ராஜஸ்தான், 13வது ஓவரில் 121 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

எனினும் ஒருபுறம் நிலையாக நின்று அதிரடி காட்டிய பட்லருக்கு உறுதுணையாக, 7வது விக்கெட்டுக்கு இணைந்தார் ரோவ்மன் போவெல்.

ராஜஸ்தான் அணி வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்திருந்த நிலையில், இருவரும் அதிரடியாக விளையாடி 67 ரன்கள் குவித்தனர்.

13 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரிடன் 26 ரன்கள் குவித்த அவர் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி வரை போராடிய பட்லர்!

அதன்பின்னர் கடைசி 3 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், காலில் காயம் ஏற்பட்டு ஓட முடியாத நிலையிலும், ஸ்ட்ரைக்கை விடாமல் தன்பக்கம் வைத்துக்கொண்டு விளையாடினார்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வருண் சக்கரவத்தி வீசிய முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசினார். அதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்த 3 பந்துகளை சந்தித்த அவர், ரன் ஏதும் எடுக்கவில்லை.

ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் ஓடிய அவர், கடைசி பந்தை மிட் விக்கெட் பக்கம் விளாசி ராஜஸ்தான் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

காயத்திற்கு மத்தியிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஆடி 60 பந்துகளில் 107 ரன்கள் குவித்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 6ல் வென்று 12 புள்ளிகளை பெற்றுள்ள ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியில் முதலிடத்தில் நீடிக்கிறது. கொல்கத்தா அணி 8 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மின்னம்பலம் மெகா சர்வே: நீலகிரி… சிகரம் தொடுவது யார்?

டீக்கடக்கார் சொன்ன கணக்கு : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *