murali vijay announce his retirement

புதிய பயணத்தில் முரளி விஜய்

விளையாட்டு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் மூத்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர், மூத்த கிரிக்கெட் வீரரான தமிழ்நாட்டை சேர்ந்த முரளி விஜய் இந்திய அணிக்காக 87 சர்வதேச போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 4,490 ரன்களை எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,982 ரன்கள் எடுத்துள்ளார். இதேபோன்று 17 ஒருநாள் போட்டிகள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

murali vijay announce his retirement in international cricket

இவர் தற்போது அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில்,

“அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறேன் என்பதை இந்த நாளில் மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் அறிவிக்கிறேன்.

2002 முதல் 2018 வரை வரையிலான ஆண்டுகள் என் வாழ்வில் எனக்குச் சிறப்பு சேர்த்தன. குறிப்பாக இந்திய அணிக்காக விளையாடியதை மிகப் பெரும் கவுரவமாக நான் கருதுகிறேன்.

இந்த வாய்ப்பை எனக்குத் தந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய சக அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள், அணி உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களுடைய ஆதரவு இல்லாமல், என்னுடைய கிரிக்கெட் பயணம் சிறப்பு பெற்றிருக்காது. கிரிக்கெட் ரசிகர்கள் எனக்கு அளித்த ஆதரவையும் ஊக்கத்தையும் நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

murali vijay announce his retirement in international cricket

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் என்னுடைய உயர்வு மற்றும் தாழ்வு என எனக்கு எப்போதும் உறுதுணையாக ரசிகர்கள் இருந்தனர்.

அவர்களுடனான என்னுடைய பயணத்தை என்றைக்கும் மறக்க முடியாது. கடைசியாக எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நிபந்தனையற்ற அன்பையும் ஆதரவையும் எனக்குத் தந்தனர். அவர்கள் எனது முதுகெலும்பாகச் செயல்பட்டனர்.

கிரிக்கெட் உலகில் இருக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆவலாக உள்ளேன். புதிய சூழல்களில் என்னுடைய புதிய சவால்களை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன். கிரிக்கெட் வீரராக என்னுடைய புதிய பயணம் தொடங்க உள்ளது.

என் வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை நோக்கி நகர்கிறேன். என்னுடைய முன்னாள் அணி வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த நினைவுகள் அனைத்திற்கும் நன்றி” என்று தனது ஓய்வை அறிவித்துள்ளார் முரளி விஜய்.

மோனிஷா

தளபதி 67: விஜய் பட அப்டேட்!

வார்த்தைக்கு வார்த்தை ஆபாச பேச்சு: திமுக ஒன்றிய செயலாளர் சஸ்பெண்ட்!

பட்டியலின மக்களுக்காகக் கோவில் பூட்டை உடைத்த ஆட்சியர்!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.