மும்பை அணி அசத்தல்: வெளியேறியது லக்னோ

விளையாட்டு

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று(மே24) நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான இஷான் கிஷன் 15 ரன்களிலும், ரோகித் சர்மா 11 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து கேமரூன் கிரீனும்-சூர்யகுமார் யாதவும் ஜோடி சேர்ந்து தங்களது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும் கேமரூன் கிரீன் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க திலக் வர்மா 26 ரன்களிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், கிறிஸ் ஜோர்டான் 4 ரன்னிலும், நேஹல் வதேரா 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

இந்நிலையில் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கைல் மேயர்ஸ்-பிரெரக் மான்கட் ஆகியோர் களமிறங்கினர். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

அவர்களை தொடர்ந்து கேப்டன் க்ருணால் பாண்டியா 8 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டுமே நம்பிக்கையாக இருந்தார். ஆயுஷ் பதோனி 1 ரன்னிலும், நிகோலஸ் பூரன் டக் அவுட்டும் ஆகினர்.

கிருஷ்ணப்பா கெளதம் 2 ரன்களில் ரன் அவுட் ஆனார். ரவி பிஷ்ணோய் கேட்ச் ஆகி நடையைக் கட்டினார். முடிவில் லக்னோ அணி 16.3 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மேத்வால் 5 விக்கெட்டுகளும், கிரிஷ் ஜோர்டான் மற்றும் பியூஸ் சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில், குவாலிஃபையர் 2 சுற்றில் மும்பை அணியும், குஜராத் அணியும் நாளை மறுநாள் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.


மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆடல்-பாடல் நிகழ்ச்சி : காவல்துறைக்கு புதிய உத்தரவு!

சிங்கப்பூர் – தமிழ்நாடு : 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *