மிரட்டிய MI…பிளே ஆப் சுற்றுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? ஆராய தொடங்கிய RCB ரசிகர்கள்!

விளையாட்டு

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மார்ச் 6 ) நடைபெற்ற மகளிர் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இரவு 7.30 மணிக்கு தொடங்கி போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது.

சோபி தேவின் 39 ரன்கள் அடித்த நிலையில் அடுத்து வந்த தீஷா கசட் டக்-அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 பவுண்டரியுடன் 23 (17) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த ஹீதர் நைட் டக் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.

அதனால் 43/4 என தடுமாறிய அந்த அணிக்கு எலிஸ் பெரி 13 (7), ரிச்சா கோஸ் 26 (23), அகுஜா 22 (13), ஸ்ரேயங்கா பாட்டில் 23 (15), மேகன் ஸ்கட் 20 (14) என லோயர் ஆர்டர் வீராங்கனைகள் கணிசமான ரன்களை அடித்தனர். ஆனாலும் 18.4 ஓவரில் 155 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.

mumbai indians win what does it take to advance rcb

அதைத்தொடர்ந்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு யாஸ்டிகா பாட்டியா நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார்.

அவர் 19 பந்துகளில் 23 ரன்கள் அடிக்க மற்றொரு வீராங்கனையான ஹேய்லே மேத்தியூஸ் -ம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், 14.2 ஓவரிலேயே 159/1 ரன்கள் எடுத்த மும்பை 9 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.

இதன் மூலம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று மும்பை அணி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

இதனிடையே, ஆரம்பத்திலேயே தொடர் தோல்விகளை சந்தித்துள்ள பெங்களூரு மேற்கொண்டு பிளே ஆப் சுற்றுக்கு செல்ல என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போதே அந்த அணியின் ரசிகர்கள் ஆராய தொடங்கியுள்ளனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கிச்சன் கீர்த்தனா: நண்டு பிரட்டல்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *