மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வாங்கிய முதல் சம்பளம் மற்றும் அவரின் தற்போதைய வளர்ச்சி ஆகியவற்றை இங்கே பார்க்கலாம்.
ஹர்திக் 2௦15-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுக வீரராக உள்ளே வந்தார். அப்போது அவரது வயது 21. ரூபாய் 1௦ லட்சம் என்ற அடிப்படை விலையில் மும்பை அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
தொடர்ந்து 2௦16, 2௦17 ஆண்டுகளிலும் அவர் தன்னுடைய அடிப்படை சம்பளமான பத்து லட்சத்திற்கு தான் விளையாடினார்.
இந்த இடைப்பட்ட காலங்களில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா நன்றாக விளையாடினார். ஆல்ரவுண்டர் என்பதால் அவரின் தேவை அணிக்கும் இன்றியமையாத ஒன்றாக இருந்தது.
இந்த முன்னேற்றத்தால் வெறும் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2018-ம் ஆண்டில், ரூபாய் 11 கோடியை சம்பளமாக கொடுத்து மும்பை அவரை தக்கவைத்துக் கொண்டது.
இதே சம்பளத்தில் அவர் 2019, 2020, 2021 ஆண்டுகளில் மும்பைக்கு ஆடினார். குஜராத் டைட்டன்ஸ் அணி 2022-ம் ஆண்டு உதயமான போது ஹர்திக்கை ரூபாய் 15 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்து, அவரை கேப்டனாகவும் அறிவித்தது.
ஹர்திக்கின் தலைமையில் முதல் ஆண்டிலேயே குஜராத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. தொடர்ந்து கடந்த 2023-ம் ஆண்டும் ரன்னராக 2-வது இடம் பிடித்தது.
இதைப்பார்த்த மும்பை அணி 5 கோப்பைகள் வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை தூக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை ரூபாய் 15 கோடி கொடுத்து வாங்கி கேப்டன் பதவியையும் அளித்துள்ளது.
2௦23 உலகக்கோப்பை தொடரின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் பாதியிலேயே விலகிய ஹர்திக் இன்னும் இந்திய அணிக்கு திரும்பவில்லை. அநேகமாக ஐபிஎல் தொடரில் தான், அவர் கிரிக்கெட் போட்டிக்கு ரிட்டர்ன் ஆவார் என கூறப்படுகிறது.
விளையாட்டு மட்டுமின்றி விளம்பரங்கள் மூலமாகவும் ஹர்திக் பணம் ஈட்டி வருகிறார். இதனால் வெறும் 9 ஆண்டுகளிலேயே பல கோடிகளுக்கு ஹர்திக் பாண்டியா அதிபராகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
30 லட்சம் அரசு வேலைகள் நிரப்பப்படும் : காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்!
ஜாபர் சாதிக்குடன் புகைப்படம் எடுத்தது ஏன்? : டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்!