இதுக்கொண்ணும் கொறைச்சல் கெடையாது… மும்பையை வறுக்கும் ரசிகர்கள்!

Published On:

| By Manjula

மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது அடுத்தடுத்து பல்வேறு விதமான அதிர்ச்சிகளை சந்தித்து வருகிறது.

குஜராத் அணியில் இருந்து ஆசை ஆசையாக ஹர்திக் பாண்டியாவை, எடுத்து அவரை மும்பை அணியின் புதிய கேப்டன் ஆக அறிவித்தது.

மறுபுறம் ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியதால் அந்த அணிக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 21) ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா தன்னுடைய 36-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணி, ”எப்போதும் எங்களது நம்பர் 1 ஆதரவாளர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரித்திகா,” என இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்தது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”அவரின் கணவருக்கு துரோகம் செய்து விட்டு எப்படி உங்களால் வாழ்த்து சொல்ல முடிகிறது?

நீங்கள் உங்களது விசுவாசமான ரசிகர்களை இழந்து விட்டீர்கள்,” என மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டபடி திட்டினர்.

இதைப்பார்த்து மும்பை அணியே என்னடா இது எந்த பக்கம் போனாலும் லாக் பண்றாங்க என, உள்ளுக்குள் அதிர்ந்து போயிருக்கும்.

ஏனெனில் அவ்வளவு மோசமாக ரசிகர்கள் அதில் மும்பை அணியை திட்டி இருந்தனர். தற்போது அந்த அணிக்கு அடுத்த பேரிடியாக மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது.

உடல்தகுதி காரணமாக வருகின்ற ஐபிஎல் தொடரில் விளையாட முடியாமல் போகும் சூழ்நிலையில் ஹர்திக் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் அந்த அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கக்கூடும்? என  சமூக வலைதளங்களில் தற்போது காரசாரமான விவாதங்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளன.

அவசரப்பட்டுட்டியே குமாரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

IPL 2024: விலகும் பாண்டியா? மீண்டும் கேப்டனாகும் ரோகித்?

தேசியப் பேரிடர் இல்லையா? நிதி கொடுக்க முடியாதா? நிர்மலா சீதாராமன் சொல்வது சரியா? – மக்கள் கருத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel