எம்.எஸ். தோனி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளான இன்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். #MSDhoni என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
கிரிக்கெட்டில் சாதனை மன்னன் என்று சொன்னால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வரும் பெயர் எம்.எஸ். தோனி.
ஏனெனில் இந்திய கிரிக்கெட் அணியை வழி நடத்தி உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளுக்கும், எண்ணற்ற வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்தவர் மகேந்திர சிங் தோனி.
கிரிக்கெட் வீரராகவும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது என நிச்சயமாக சொல்லலாம். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நாள் இன்று..
இந்நிலையில், அவரது ரசிகர்கள் இதனை நினைவு கூறும் வகையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
மகேந்திர சிங் தோனியின் சர்வதேச கிரிக்கெட் ஓய்வு என்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் வேதனை அளிக்க கூடியது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் எமோஷனலாக பதிவு செய்து வருகின்றனர். அதில் மிஸ் யூ மஹி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
- க.சீனிவாசன்
உலக பேட்மின்டன்: பி.வி. சிந்து விலக உண்மை காரணம் என்ன?