17வது ஆண்டிலும் கேப்டன் தோனி! – சிஎஸ்கே வெளியிட்ட வீரர்களின் முழுப்பட்டியல்!

விளையாட்டு

ஐபிஎல் 2024 மினி ஏலத்தை முன்னிட்டு அதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்கப்பட்ட, ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியலை இன்று (நவம்பர் 26) வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு நடைபெற உள்ள 17வது ஐபிஎல் தொடரை முன்னிட்டு வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் மினி ஏலம் நடைபெற உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு அணி உரிமையாளர்கள் தக்கவைப்பு பட்டியலை அறிவிக்க இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தொடரில் விளையாடும் 10 அணிகளும் தங்களது அணியில்  தக்கவைக்கப்பட்ட மற்றும் ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்களின் முழுப் பட்டியலை இன்று வெளியிட்டு வருகின்றன.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மொத்தம் 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜய் ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா.

இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு அணியின் கேப்டனாக பொறுப்பை நீண்ட காலமாக (17 ஆண்டுகள்) வைத்திருக்கும் பெருமையை தோனி பெற்றுள்ளார்.

அதே வேளையில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் அம்பதி ராயுடு உட்பட 8 பேரை விடுவித்துள்ளது சென்னை அணி.

ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்:  பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி, சிசண்டா மகலா, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங். இதில் 4 பேர் வெளிநாட்டு வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தற்போது சென்னை அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுக்க ரூ.32.2 கோடி கைவசம் கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”வெளிநாட்டில் திருமணம் நடத்தாதீங்க”: மன் கி பாத்தில் பிரதமர் வேண்டுகோள்!

WorldCup2023: ரோஹித்தின் கைகளிலிருந்து, மார்ஷின் கால்களுக்கு போன உலகக்கோப்பை… காரணம் இதுதான்!

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *