ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், அவரது தாய் அவருக்காக கூறிய வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
சென்னையில் நேற்று (மே 24) நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், ஐதராபாத் அணி ஐபிஎல் 2024க்கான இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
முதலில் பேட்டிங்க் செய்த ஐதராபாத் அணி 175 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆனால், ஸ்பின்னிங்கில் ஜாம்பவாங்களாக இல்லாமல் பகுதி நேர ஸ்பின்னர்களை மட்டும் வைத்து ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் செய்த வித்தை பலரையும் மிரள வைத்தது.
அதிலும் குறிப்பாக ஷாபாஸ் அஹ்மத் பந்துவீச்சு ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைவதை அறிந்து உடனடியாக அவருக்கு பதிலாக அபிஷேக் சர்மாவை களத்தில் இறக்கியது தான் குவாலிஃபையர் 2-ன் திருப்புமுனையாக இருந்தது. இந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா 4 ஓவர்களை வீசுவது இதுவே முதல்முறையாகும்.
எந்த வீரரிடம் என்ன திறமை இருக்கிறது, எந்த வீரரை எப்போது பயன்படுத்த வேண்டும், டி20 கிரிக்கெட்டில் எவ்வளவு வேகமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று கம்மின்ஸ் மிகத் தெளிவாக இருக்கிறார். இதன்மூலமாகத்தான், ஐதராபாத் அணியை 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு கொண்டு சென்றுள்ளார்.
இந்நிலையில், பேட் கம்மின்ஸ் அவரது தாய் அவரிடம் கூறிய வார்த்தைகளை நினைவுகூர்ந்தார். அப்போது, “போ.. உலகத்தை எதிர்கொள். யாரோ ஒருவர் இந்த உலகத்தில் அற்புதமான விஷயங்களை செய்யத்தான் போகிறார்கள். அது ஏன் நீயாக இருக்கக்கூடாது” என கம்மின்ஸ் தாயார் கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…