இந்திய வீரரான முகமது சிராஜ் முதன்முறையாக ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு வந்துள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. அதனை முன்னிட்டு ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடத்துக்கு முன்னேறியது.
முன்னேறிய கில், ரோகித்
இதனை தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதன்படி பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் உட்பட அதிக ரன்களை(360) குவித்த சுப்மன் கில் 734 புள்ளிகளுடன் 2 இடம் உயர்ந்து 6 இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
மூன்று வருடங்களுக்கு பிறகு சதம் கண்ட கேப்டன் ரோகித் சர்மா 9வது இடத்துக்கு முன்னேறினார். அதே வேளையில் விராட் கோலி ஒரு இடம் பின்னிறங்கி 7 வது இடத்துக்கு வந்துள்ளார்.
சிராஜ் முதலிடம்
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வேகபந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 20ஒருநாள் போட்டிகளில் 37விக்கெட்களை சாய்த்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து வருகிறார்.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் 9 விக்கெட்களை வீழ்த்தியிருந்த சிராஜ், அதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இவ்வாறு துல்லியமான தாக்குதல் பந்துவீச்சை தொடர்ந்து வரும் முகமது சிராஜ் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 729புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரை தவிர வேறு எந்த இந்திய பந்துவீச்சாளரும் முதல் 10 இடங்களில் இல்லை.
சிராஜுக்கு அடுத்தபடியாக ஹேசில்வுட் 727புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்திலும், டிரென்ட் போல்ட் 708புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
என்எல்சியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுக : அன்புமணி கடிதம்
ரூ. 4,669 கோடியா? : ஆடவர் ஐபிஎல் ஏலத்தை விஞ்சிய மகளிர் ஐபிஎல் ஏலம்!