ஆஸ்திரேலியா சாம்பியன்: மோடி, ராகுல், ஸ்டாலின் வாழ்த்து!

அரசியல் விளையாட்டு

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (நவம்பர் 19) நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6வது முறையாக சம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா அணி வென்றுள்ளது.

இதனையடுத்து இந்திய பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் ஆஸ்திரேலியா அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Image

எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்!

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ”உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! போட்டியின் மூலம் அவர்களின் ஒரு பாராட்டுக்குரிய செயல்திறன், ஒரு அற்புதமான வெற்றியில் உச்சக்கட்டத்தை அடைந்தது. இன்று அவரது சிறப்பான ஆட்டத்திற்காக டிராவிஸ் ஹெட்க்கு பாராட்டுகள்!” என்று வாழ்த்தியுள்ளார்.

அதே நேரத்தில் பைனலில் கடைசி வரை போராடிய இந்திய அணிக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர், ” அன்புள்ள இந்திய அணி, உலகக் கோப்பையின் மூலம் உங்களின் திறமையும் உறுதியும் குறிப்பிடத்தக்கது. நீங்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறீர்கள். நாங்கள் இன்றும் எப்போதும் உங்களுடன் நிற்கிறோம்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

Image

நம்பிக்கையுடன் அடுத்த முறை வெல்வோம்!

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சமுகவலைதள பக்கத்தில், “இந்திய அணி வீரர்களே, நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்! வெற்றி அல்லது தோல்வி – எதுவானாலும் நாங்கள் உங்களை  விரும்புகிறோம். நம்பிக்கையுடன் அடுத்த முறை வெல்வோம்.

உலகக் கோப்பை வெற்றிக்கு தகுதியான ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Image

வாழ்த்தும், பாராட்டும்!

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், “உலகக் கோப்பையில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துகள்! 🏆 அரையிறுதி வரை தோற்கடிக்க முடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய இந்திய அணிக்கு பாராட்டுக்கள். உங்கள் நெகிழ்ச்சியும் ஆர்வமும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 🏏👏 ” என்று கூறியுள்ளார். 
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *