Asian Para Games: பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு… முதல்வர் பாராட்டு!

Published On:

| By Monisha

mariyappan thangavelu won silver

ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீனாவில் ஹாங்சோவில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியைத் தொடர்ந்து தற்போது 4 ஆவது பாரா ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. நேற்று தொடங்கிய இந்த ஆசிய விளையாட்டு போட்டி வரும் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவிலிருந்து 191 வீரர்கள் மற்றும் 112 வீராங்கனைகள் என்று மொத்தம் 303 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

ஆசிய பாரா விளையாட்டுகளில் இன்று நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 4 பதக்கங்களை வென்றுள்ளது. உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் இந்திய வீரர் சைலேஷ் தங்கம் வென்றார். தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலும் வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் இந்திய வீரர் ராம் சிங் வெண்கலம் வென்றார்.

மகளிருக்கான படகு போட்டி VL2 பிரிவில் பிரச்சி யாதவ் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மாரியப்பன் தங்கவேலுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆசிய பாரா விளையாட்டு 2022 உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள மாரியப்பன் தங்கவேலுவிற்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுன்கள்…

மோனிஷா

பாஜகவில் இருந்து விலகிய கவுதமி: சந்தேகம் எழுப்பும் வானதி சீனிவாசன்

கவுதமி விலகல்… தேர்தலில் வாய்ப்பளிக்காதது காரணமா?: எல்.முருகன் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share