IPL : 2024 ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இதை தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நோக்கி நேற்று (ஏப்ரல் 1) களமிறங்கியது.
இந்த தொடரில், தனது சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கும் முதல் போட்டி என்பதால், அந்த அணியின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை மிகுதியாகவே இருந்தது.
இப்போட்டியில் மும்பைக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிறகு 125 ரன்களுக்கு சுருண்டது.
டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் ரோகித் சர்மா, நமன் தீர் மற்றும் பிரெவிஸ் ஆகியோர் டக் அவுட் ஆனதுடன், 4 ஓவரில் 4 முன்னணி விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா(34) மற்றும் திலக் வர்மா(32) ஆகியோர் மட்டுமே 30 ரன்களை கடந்தனர்.
தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் (10), பட்லர் (13), சாம்சன் (12) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர் எனினும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ரியான் பராக் (54*) அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் குவித்த ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்ற நிலையில், சொந்த மைதானம் உட்பட விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது மும்பை அணி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: உடல் முழுவதும் வியர்க்குரு… அதற்கான பவுடரை உபயோகிப்பது நல்லதா?
ஹெல்த் டிப்ஸ்: கோடையில் அதிகரிக்கும் கண் நோய்கள்: தீர்வு என்ன?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!