ICC World Cup: 2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டன. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 241 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6 வது முறையாக ஒருநாள் உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. Mitchell Marsh leg on the Trophy
இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்சல் மார்ஷின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அந்த புகைப்படத்தில், மிட்சல் மார்ஷ் தனது காலை உலகக்கோப்பையின் மீது வைத்து அமர்ந்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு, இணையத்தில் பலரும் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மிட்சல் மார்ஷின் இந்த செயலுக்கு, “உங்களுக்கு கோப்பையை மதிக்க தெரியவில்லை என்றால், நீங்கள் வென்றாலும் உங்களுக்கு தோல்வி தான்” என ரசிகர் ஒருவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/MrAbhi80/status/1726479870094606506
இது குறித்து, மற்றொரு பயனர் தனது X தள பக்கத்தில், “எதுவாகிலும், அவர்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். தற்போது அது அவர்களின் கோப்பை”, என பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/TheSGWritings/status/1726478098294886606
மிட்சல் மார்ஷின் இந்த செயல் சரிதானா என மற்றொரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார்.
https://twitter.com/KuchLafz/status/1726489586082394477
இதுபோன்று, கிரிக்கெட் ரசிகர்கள் பலர் மிட்சல் மார்ஷின் இந்த நடவடிக்கை குறித்து தங்களது விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். Mitchell Marsh leg on the Trophy
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
3 வருடங்களாக ஆளுநர் என்ன செய்துகொண்டிருந்தார்? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்!
நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை எப்போது?
பியூட்டி டிப்ஸ்: தலைக்குக் குளிக்க வெறும் சீயக்காய்த்தூள் மட்டும் பயன்படுத்துவது நல்லதா?