’எனக்கு பிரச்சனையே நீங்க தான்’ : பத்திரிகையாளரை திட்டிய மும்பை இந்தியன்ஸ் வீரர்!

விளையாட்டு

தனது உடல்நிலை குறித்து தவறான தகவல் அளித்த பத்திரிக்கையாளருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ஜோப்ரா ஆச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஐபில் கிரிக்கெட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமானார் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர்.

4 ஆண்டுகளாக அந்த அணியில் 35 போட்டிகளில் விளையாடிய தனது மிரட்டலான பந்துவீச்சால் 46 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் ஐபிஎல் தொடரின் முக்கிய வீரராக அவர் கருதப்பட்டார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி ஜோப்ரா ஆர்ச்சரை 8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆனால் யார் கண்பட்டதோ தெரியவில்லை காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதிலும் 75 ரன்களை விட்டு கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே மும்பை அணியின் நட்சத்திர வீரரான பும்ரா காயம் காரணமாக விளையாடாத நிலையில், ஆர்ச்சர் தொடர்ந்து பெஞ்சில் அமரவைக்கப்படுவது அந்த அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் களமிறங்கவில்லை.

இதனையடுத்து ஜோப்ரா ஆர்ச்சருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய பெல்ஜியம் வரை செல்ல இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அவர் விலகுவதாக டெலிகிராப் உள்ளிட்ட சர்வதேச பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன.

சுத்த பைத்தியக்காரத்தனம்

இதனைக் கண்டு கோபமடைந்த ஜோப்ரா ஆர்ச்சர், தன்னை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளரை கடுமையாக சாடி இன்று ட்விட் செய்துள்ளார்.

அவரது பதிவில், ”உண்மை என்னவென்று தெரியாமலும், என் அனுமதி பெறாமலும் என்னை பற்றி செய்தி வெளியிடுவது சுத்த பைத்தியக்காரத்தனம்.

இந்த செய்தியை வெளியிட்டது யாராக இருந்தாலும் வெட்கப்பட வேண்டும். ஏற்கனவே ஒரு வீரர்(பும்ரா) காயம் அடைந்திருப்பது அணியில் கவலையும், சிக்கல்களையும் கொடுத்துள்ளது.

இந்த நேரத்தில் கூட உங்களுடைய தனிப்பட்ட லாபத்திற்காக என்னை பயன்படுத்திக் கொள்வது கேவலமான விஷயம். எனக்கு பிரச்சனையே உங்களைப் போன்ற நபர்கள் தான்” என்று ஜோப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

கேப்டன் மில்லர் படப்பிடிப்பு: தற்போதைய நிலவரம் என்ன?

கர்நாடகா தேர்தல்: பிரச்சாரத்தில் தோசை சுட்ட பிரியங்கா

+1
1
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *