ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஐஎல்டி சர்வதேச டி20 லீகில் ரிலையன்ஸ் களமிறக்கும் எம்.ஐ. எமிரேட்ஸ் என்ற அணிக்கான வீரர்கள் பட்டியலை ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய டி 20 லீக் போட்டி 2023 ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது. ஐஎல்டி 20 போட்டியில் அதிக சம்பளம் தரப்படுவதால் அதில் இணைந்து கொள்ள பிரபல வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த போட்டிகள் துபாய் , அபுதாபி , ஷார்ஜாவில் நடைபெறவிருக்கிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , கேப்ரி குளோபல் , ஜிஎம் ஆர், லேன்சர் கேபிடல், அதானி ஸ்போர்ட்ஸ்லைன் அணிகளின் உரிமையாளர்கள் வீரர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எம்.ஐ.எமிரேட்ஸ் அணி தங்கள் அணியின் வீரர்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் குழும சேர்மன் ஆகாஷ் அம்பானி கூறும்போது, “ எங்களின் ஒன் ஃபேமிலியில் இணையும் 14 வீரர்கள் பெயர்களை அறிவிப்பதில் மகிழ்கிறோம். இவர்கள் எம்.ஐ. எமிரேட்ஸ் அணிக்காக ஆடப்போகிறார்கள். எங்களின் தூணாக இருக்கும் கெய்ரன் பொலார்ட் எம்.ஐ. எமிரேட்ஸ்க்கு ஆடுகிறார். இவருடன் டிவைன் பிராவோ, ட்ரெண்ட் போல்ட், நிகலஸ் பூரன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மை எமிரேட்சுக்கு ஆடும் அனைத்து வீரர்களையும் வரவேற்கிறோம். எப்போதும் இளம் திறமைக்கும், அனுபவ வீரர்களுக்கும் இடையே ஒரு பேலன்ஸை ஏற்படுத்துவது மும்பை இந்தியன்ஸின் அடிப்படைகளில் ஒன்று” என்றார்.
எம்.ஐ.எமிரேட்சுக்கு ஆடும் வீரர்கள் பட்டியல் :
கெய்ரன் பொலார்ட் – வெஸ்ட் இண்டீஸ், டிவைன் பிராவோ – வெஸ்ட் இண்டீஸ்,நிகலஸ் பூரன் – வெஸ்ட் இண்டீஸ்,ட்ரெண்ட் போல்ட் – நியூசிலாந்து, ஆந்த்ரே பிளெட்சர் – வெஸ்ட் இண்டீஸ், இம்ரான் தாஹிர் – தென் ஆப்பிரிக்கா,சமித் படேல் – இங்கிலாந்து,வில் ஸ்மீத் – இங்கிலாந்து,ஜோர்டான் தாம்சன் – இங்கிலாந்து,நஜ்புல்லா ஸத்ரான் – ஆப்கானிஸ்தான், ஜாகீர் கான் – ஆப்கானிஸ்தான், ஃபசல் ஹக் ஃபரூக்கி – ஆப்கானிஸ்தான், பிராட் லீ வீல் – ஸ்காட்லாந்து, பாஸ் டி லீடி – நெதர்லாந்து
மு.வா.ஜெகதீஸ் குமார்