FIFA WorldCup :சவுதி அரேபியாவை வீழ்த்தியது மெக்சிகோ

Published On:

| By Jegadeesh

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நள்ளிரவு தோகாவில் உள்ள லூசைல் மைதானத்தில் நடந்த ’சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் சவுதி அரேபியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதின.

பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் சமநிலை நீடித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2 -வது பாதியின் 47 -வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் ஹென்றி மார்ட்டின் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார்.

Mexico defeated Saudi Arabia

அவரைத் தொடர்ந்து 52-வது நிமிடத்தில் பிரி கிக் முறையில் மற்றொரு வீரர் லூயிஸ் சாவேஸ் கோல் அடிக்க மெக்சிகோ அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர், ஆட்ட நேர முடிவில் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் சவுதி அரேபியா வீரர் அல் தவ்சாரி 90 -வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

ஆனால் அந்த கோல் அணியின் வெற்றிக்கோ, டிரா செய்வதற்கோ இயலாமல் போனது.

இதன் மூலம் மெக்சிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றபோதும் உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேறியது.

அதேபோல் 3 புள்ளிகளுடன் சவுதி அரேபியாவும் போட்டியில் இருந்து வெளியேறியது. இதன்படி சி பிரிவில் அர்ஜெண்டினா, போலாந்து அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாவ்.. வயசானாலும் கவர்ச்சி குறையாத ஸ்ரேயா..லேட்டஸ்ட் படங்கள் இங்கே!

உலகக்கோப்பை கால்பந்து: 2 பெனால்டியை தவறவிட்ட மெஸ்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share