அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமோ…. அதே அளவிற்கு மெஸ்ஸி வளர்த்து வரும் செல்லப் பிராணியான பிரெஞ்ச் மஸ்டிஃப் நாயும் அவரின் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். இது பிரான்ஸ் நாட்டின் மிக பழமையான நாய் இனங்களில் ஒன்று. இவை கால்நடைகளை மேய்க்க மற்றும் வீடுகளில் காவல் பணியில் ஈடுபட தகுந்தவை.
மெஸ்ஸி வளர்த்து வரும் பிரெஞ்ச் மஸ்டிஃப் நாய்க்கு ஹல்க் என்ற பெயர் வைக்கப்பட்டுளளது. பெயருக்கு ஏற்றபடி உருவமும், வலிமையும் இருப்பதால், ரசிகர்கள் சரியான பெயர்தான் என்று கொண்டாடுகின்றனர். செந்நிறத்தில் மெஸ்ஸியுடன் கால்பந்து விளையாடும் பிரெஞ்ச் மஸ்டிஃப் “ஹல்க்”கின் விலை கிட்டத்தட்ட 3 லட்சம் வரை என்கிறார்கள்.
இந்த நாயை வளர்க்க மாதம் பல ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டியது இருக்கும். மொத்தமாக உணவு, மருத்துவம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்க்கும் போது , இந்த நாயின் வாழ்நாளில் ரூ.17 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும். தற்போது மியாமியில் வசித்து வரும் மெஸ்ஸியின் குடும்பத்தினர், சில மருத்துவ பிரச்சனைகள் காரணமாக ஹல்க்கை மட்டும் பார்சிலோனா நகரிலேயே தங்க வைத்துள்ளனர்.
இந்த நாயின் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும். மெஸ்ஸியின் நாய்க்கு 7 வயதாகி விட்டதால்,. இடம்பெயர்ந்தால் இதய நோய் தாக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பார்சிலோனாவிலேயே ஹல்க் இருக்கிறது. இது தவிர apricot toy poodle ரக நாய் ஒன்றையும் மெஸ்சி குடும்பத்தினர் வளர்க்கின்றனர். அபு என்ற பெயர் கொண்ட இந்த நாய் மெஸ்சி குடும்பத்துடன் மியாமியில் இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பணி!
மீண்டும் பெரிய அறுவை சிகிச்சை : தொகுப்பாளினி டிடி உருக்கம்… பிரபலங்கள் ஆறுதல்!