உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா அணியின் மெஸ்ஸி முதல் கோல் அடித்துள்ளார்.
உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டி இன்று இரவு எட்டு முப்பது மணிக்குக் கோலாகலமாகத் தொடங்கியது.
இதில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணி விளையாடி வருகிறது.
நட்சத்திர வீரரான அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதை ரசிகர்களின் கர ஓசைகளின் மூலம் கேட்க முடிந்தது.
இந்நிலையில், ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து அசத்தினார் மெஸ்ஸி.
இதனால் 1-0 என்ற கணக்கில் அர்ஜெண்டினா அணி முன்னிலையில் உள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து: பிரதமர் மோடி
திமுக எனது உடைகள், கடிகாரம் குறித்துக் கேட்கிறார்கள்: அண்ணாமலை!