அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் தனது அணிக்காக 100வது கோலை அடித்தார்.
உலக கால்பந்து சாம்பியனான அர்ஜெண்டினா தனது 2வது சர்வதேச ஃபிரண்ட்லி மேட்ச்-ல் குராக்கோவுடன் மோதியது. இதில் 7-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது.
அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 20ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.
தொடர்ந்து மெஸ்ஸி, 33 மற்றும் 37ஆவது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக்கை பதிவு செய்தார்.
அர்ஜெண்டினா அணியில் நிகோ கோன்சலஸ் 23ஆவது நிமிடத்தில் அணிக்காக 2ஆவது கோலை அடித்தார். என்சோ பெர்னாண்டஸ் 35ஆவது நிமிடத்தில் கோல் அடித்து அர்ஜெண்டினாவின் கோல் கணக்கை 4ஆக உயர்த்தினார்.
முதல் பாதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து 2ஆவது பாதியில், டி மரியா 77ஆவது நிமிடத்தில் ஆவது கோல் மற்றும் மோன்டீல் 87ஆவது நிமிடத்தில் 7ஆவது கோலை பதிவு செய்தனர். இதனால் 7-0 என்ற கணக்கில் குரோக்கோ அணியை வீழ்த்தியது அர்ஜெண்டினா.
இதனிடையே லியோனல் மெஸ்ஸி நேற்றைய ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணிக்காக 100வது கோல் அடித்து சாதனை படைத்தார்.
அதுமட்டுமின்றி கால்பந்து வரலாற்றிலேயே இதுவரை நாட்டிற்காக 100 கோல்களை அடித்த வீரர்களில் மூன்றாவது வீரராக உள்ளார் மெஸ்ஸி.
நாட்டிற்காக 122 கோல் அடித்து ரொனால்டோ முதலிடத்திலும் 109 கோல் அடித்து அலி டேய் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர்.
கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடைபெற்ற பனாமாவுக்கு எதிரான நட்பு ரீதியான கால்பந்து போட்டியில் மெஸ்ஸி அனைத்து விதமான கால்பந்து போட்டிகளிலும் 800-வது கோலை பதிவு செய்து சாதனை படைத்திருந்தார்.
மெஸ்ஸியில் அடுத்தடுத்த சாதனைகள் அவரது ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.
மோனிஷா
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
விண்ணில் அதிசயம் : வைரலாகும் அமிதாப் பச்சன் வீடியோ!