பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவைத் தொடர்ந்து டோனி மகளுக்கும் ஜெர்சியை பரிசாக அனுப்பியுள்ளார், மெஸ்சி.
உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனிக்கு என்றும் தனி இடம் உண்டு. அதற்குக் காரணம், குறுகிய காலத்திலேயே மகத்தான சாதனைகளைச் செய்தவர். அதனால் இன்றும் ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சியும் பல சாதனைகளைப் புரிந்திருக்கிறார். அவருக்கும் உலக அளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
லியோனல் மெஸ்சியின் தீவிர ரசிகராக மகேந்திர சிங் டோனியும் உள்ளார். அர்ஜென்டினா கால்பந்து கோப்பையை உச்சி முகர்ந்ததற்கு டோனி வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டோனியின் மகள் ஜிவாவிற்கு அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டனும், தற்போதைய உலக நாயகனுமான மெஸ்சி, ஜெர்சி ஒன்றைப் பரிசாக அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் கத்தாரில் நடந்த ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றிருந்தது.
இந்த சூழலில் தனது கையொப்பம் இட்ட அர்ஜென்டினா தேசிய அணியின் ஜெர்சியை தோனி மகள் ஜிவாவிற்காக மெஸ்சி அனுப்பி வைத்துள்ளார்.
அதில் “PARA ZIVA” என எழுதி மெஸ்சியின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. PARA ZIVA என்ற ஸ்பானிஷ் வார்த்தைகளுக்கு ’ஜிவாவிற்காக இந்த அன்பளிப்பு’ என்று அர்த்தம். இதுதொடர்பாக தோனியின் மகள் ஜிவாவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போடப்பட்டுள்ளது.
பரிசாக கிடைத்த ஜெர்சியை அணிந்துகொண்டு மெஸ்சி கையெழுத்து போட்ட இடத்தை கையால் காண்பிக்கிறார் ஜிவா. இந்த புகைப்படம், டோனி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதேபோல் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவுக்கும், மெஸ்சி தன் கையெழுத்து இட்ட ஜெர்சியை கடந்த சில தினங்களுக்கு முன்பு வழங்கியிருந்தார்.
முன்னதாக, ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக தயாராகி கொண்டிருந்த லியோனல் மெஸ்சி, ”கேப்டன்ஷிப்பில் டோனியின் அணுகுமுறையை பின்பற்ற போகிறேன். இதன்மூலம் நிச்சயம் மாற்றம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
ரிஸ்க் தொகுதிகள்- ரிஸ்க் மாநிலம்: பாஜகவின் பக்கா பிளான்!
பொங்கல் தொகுப்பில் கரும்பு: அரசு அறிவிப்பு!