அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி போட்டியுடன் உலகக்கோப்பை போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இன்று (டிசம்பர் 14) நள்ளிரவு 12.30 மணிக்கு குரோஷியா – அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டி லுசைஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா அணி குரோஷியாவை வீழ்த்தியது. அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 34வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தார். ஜுலியன் அல்வொரஸ் 39வது நிமிடத்தில் 2வது கோல் அடித்தார்.
69வது நிமிடத்தில் ஜுலியன் அல்வொரஸ் மீண்டும் ஒரு கோல் அடித்ததால் அர்ஜெண்டினா 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அர்ஜெண்டினா அணி 6வது முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது.
இந்நிலையில் அர்ஜெண்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
“எனது கடைசி ஆட்டத்தை இறுதிப்போட்டியில் விளையாடுவதன் மூலம் எனது உலகக்கோப்பை பயணத்தை முடிக்கிறேன்” என்று மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசும் போது கூறியுள்ளார்.
அர்ஜெண்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் மெஸ்ஸியின் ஓய்வு முடிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினா அணியில் அதிக கோல்களை அடித்த வீரராக மெஸ்ஸி உள்ளார். உலகக்கோப்பை இறுதிப்போட்டி டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மோனிஷா
ஒவ்வொரு தொகுதியிலும் மினி ஸ்டேடியம் : அமைச்சர் உதயநிதி
மாமன்னன் தான் கடைசி படம்: அமைச்சர் உதயநிதி சினிமாவுக்கு டாடா