மல்யுத்த வீரர்கள் போராட்டம்: ஆதரவளித்த 1983 சாம்பியன் டீம்!
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக 1983-ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
1983-ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின. கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் ரோஜர் பின்னி (தற்போதைய பிசிசிஐ தலைவர்), சுனில் கவாஸ்கர், மொஹிந்தர் அமர்நாத், ஸ்ரீகாந்த், சையது கிர்மானி, யாஷ்பால் ஷர்மா, மதன் லால், பல்விந்தர் சிங் சந்து, சந்தீப் பாட்டீல், கீர்த்தி ஆசாத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தநிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு 1983-ஆம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி வீரர்கள் ஆதரவாக அறிக்கை வெளியிடுள்ளனர்.
அந்த அறிக்கையில், “மல்யுத்த வீரர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்படுவதை கண்டு நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறோம்.
அவர்கள் கஷ்டப்பட்டு பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச நினைத்தார்கள் என்பது கவலை அளிக்கிறது.
இந்த பதக்கங்கள் அவர்களின் பல ஆண்டுகளின் முயற்சி, தியாகம், உறுதிப்பாடு மற்றும் மன உறுதியின் வெளிப்பாடாகும். இது அவர்களுடைய பதக்கங்கள் மட்டுமல்ல தேசத்தின் பெருமையும் மகிழ்ச்சியும் ஆகும்.
இந்த விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் மல்யுத்த வீரர்கள் எடுத்துவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
அவர்களின் குறைகள் கேட்கப்பட்டு விரைவில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்திய நாட்டில் சட்டம் வெல்லட்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
செல்வம்
சென்னை கோரமண்டல் ரயில் விபத்து : 30 பேர் பலி?
டிஜிட்டல் திண்ணை: ஐ.நா.வா… அறநிலைத்துறையா? மனம் திறந்த பி.டி.ஆர்.