meesi clinch his 8 ballen dor award

8-வது முறையாக மெஸ்ஸிக்கு விருது: விமர்சிக்கும் ரசிகர்கள்!

விளையாட்டு

கடந்த ஆண்டு கத்தாரில் நடந்த கால்பந்து உலகக்கோப்பையில் அர்ஜென்டினா அணியை வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக இருந்தவர் மெஸ்ஸி. அந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக தங்கப் பந்து விருதையும் அவர் வென்றிருந்தார்.

இந்த நிலையில், ஆண்டுதோறும் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கு  வழங்கப்பட்டு வரும் Ballon d’Or விருதை நடப்பு ஆண்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

இதற்காக ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரையிலான வீரர்களின் செயல்பாடு கணக்கில் கொள்ளப்பட்டு, விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 30 வீரர்கள் இடம்பெற்றனர்.

இவர்களில் சிறந்த வீரர் யார் என்பது ரசிகர்களின் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்டது. அதில் மெஸ்ஸி, எம்பாப்பே, கெவின் டி ப்ரூய்ன், ஹாலண்ட், ரோட்ரி ஆகியோர் முதல் ஐந்து இடங்களை பிடித்தனர்.

இந்த நிலையில் பாரீஸில் நேற்று (அக்டோபர் 30) இரவு நடைபெற்ற விழாவில், நடப்பு ஆண்டின் Ballon d’or விருதை வென்றவராக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி அறிவிக்கப்பட்டார்.

கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமிடம் இருந்து விருதை பெற்ற மெஸ்ஸி, இந்த விருதினை 1986 இல் அர்ஜென்டினா உலகக் கோப்பையை வெல்ல உதவிய மறைந்த டியாகோ மரடோனாவுக்கும் சமர்ப்பிப்பதாக மேடையிலேயே அறிவித்தார்.

இதன்மூலம் 8-வது முறையாக இந்த விருதை வென்று 36 வயதான மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார். முன்னதாக 2009, 2010, 2011, 2012, 2015, 2019 மற்றும் 2021-ல் Ballon d’Or விருதை அவர் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image

கால்பந்து உலகில் மெஸ்ஸியை தவிர வேறு யாருமே Ballon d’Or விருதை 5 முறைக்கு மேல் வென்றதில்லை. மெஸ்ஸிக்கு அடுத்தப்படியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறையும், மைக்கேல் பிளாட்டினி, ஜோஹன் க்ரூஃப் மற்றும் மார்கோ வான் பாஸ்டன் ஆகியோர் தலா மூன்று முறையும் இந்த விருதை வென்றுள்ளனர்.

பலரும் எதிர்பார்த்தபடி மெஸ்ஸிக்கு  Ballon d’Or விருது வழங்கப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதே வேளையில், டாப் 5 பட்டியலில் இடம்பெற்றிருந்த எர்லிங் ஹாலண்ட் இரண்டாம் இடம் பிடித்த நிலையில், அவர் ஏமாற்றப்பட்டதாகவும், மெஸ்ஸியை விட நடப்பு ஆண்டில் மான்செஸ்டர் சிட்டி முன்கள வீரரான ஹாலண்ட் தான் சிறப்பாக விளையாடினார் என்றும் மெஸ்ஸிக்கு எதிராக சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சாம்பியன்ஸ் லீக், இங்கிலீஷ் பிரீமியர் லீக், எஃப்ஏ கோப்பை என மான்செஸ்டர் சிட்டி அணிக்காக கடந்த சீசனில் 52 கோல்களை அடித்துள்ளார் எர்லிங் ஹாலண்ட்.

தனது முதல் Ballon d’Or விருதை பெற தவறிய ஹாலண்ட் Gerd Muller டிராபியை வென்றார். அவரது மான்செஸ்டர் சிட்டி அணி ஆடவர் பிரிவில் சிறந்த கிளப் அணிக்கான விருதை அணி வென்றது.

Image

மகளிர் பிரிவில் Ballon d’Or விருதை ஸ்பெயின் நாட்டுக்காக விளையாடி வரும் அடனா பொன்மதி வென்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: முதல்வர்

பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிய கங்கனாவின் ‘தேஜஸ்’!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *