virat kohli maybe miss ipl 2024
வருகின்ற ஐபிஎல் தொடரை நட்சத்திர வீரர் விராட் கோலி மிஸ் செய்யலாம் என, புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் நடப்பு ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் மாதம் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.3௦ மணிக்கு தொடங்குகிறது.
இதில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன. இதன் மூலம் 9-வது முறையாக முதல் போட்டியில் சென்னை அணி விளையாடவிருக்கிறது.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களின் பேவரைட் வீரருமான விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரை மிஸ் செய்யலாம் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய விழாவொன்றில் ராஞ்சியில் உள்ள ஐஐஎம் மாணவர்களுடன் சுனில் கவாஸ்கர் கலந்துரையாடினார். அப்போது விராட் கோலி குறித்த கேள்விக்கு, ”அவர் தற்போது விளையாடாமல் இருக்கிறார். ஒருவேளை ஐபிஎல் தொடரிலும் அவர் விளையாட முடியாமல் போகலாம்,” என்றார்.
இந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட கோலி ஐபிஎல் போட்டியை மிஸ் செய்ததில்லை. இதுவரை 237 போட்டிகளில் ஆடி 7,263 ரன்களை அவர் எடுத்துள்ளார்.
அதோடு ஐபிஎல் ஆரம்பித்ததில் இருந்து வேறு அணிக்கு செல்லாமல் இருக்கும் ஒரே வீரர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கும் கோலி விரைவில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே, ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.
தற்போது விராட் கோலி ஐபிஎல் தொடரை மிஸ் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி இருப்பதால், அவரது ரசிகர்களுக்கு இது மிகுந்த வருத்தத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் விராட் – அனுஷ்கா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதன் காரணமாக விராட் இங்கிலாந்திற்கு எதிரான மொத்த டெஸ்ட் தொடரையும், மிஸ் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆர்.ஜே.பாலாஜி Vs ஹெச். வினோத் : தளபதி 69 இயக்குநர் யார்?
திருப்பூர், நாகையை மீண்டும் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்
virat kohli maybe miss ipl 2024