மேக்ஸ்வெல் குழந்தை பெயர் இதுதான்!

விளையாட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல்லின் ஆண் குழந்தைக்கு லோகன் மாவ்ரிக் மேக்ஸ்வெல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மெக்ஸ்வெல் வினி ராமனை 2022-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வினி ராமன் இந்தியாவை பூர்விகமாக கொண்டவர். அமெரிக்காவில் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இந்த தம்பதிகளுக்கு கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.

இன்று வினி ராமன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது குழந்தை புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் குழந்தைக்கு லோகன் மாவ்ரிக் மேக்ஸ்வெல் என்று பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மே மாதம் வினி தாய்மையடைந்திருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

அதில், “எனக்கும் மேக்ஸ்வெல்லுக்கும் வரும் செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்க உள்ளது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பயணம் என்பது சுமூகமானதாகவோ எளிதானதாக இல்லை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். இந்த தருணத்தில் தாய்மைடைந்த அல்லது குழந்தையை இழந்த மற்ற தம்பதிகளுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

மெக்ஸ்வெல்லுக்கு குழந்தை பிறந்ததற்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச், “வாழ்த்துக்கள். உங்களுடைய குழந்தையை பார்க்க எங்களால் காத்திருக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல் இடம்பெற்றுள்ளார். இதற்காக அவர் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

செல்வம்

“தமிழகத்தின் திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகிறார்கள்” – ஸ்டாலின்

அண்ணா பிறந்தநாள்: தலைவர்கள் மரியாதை!

 

+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *