விம்பிள்டன் பட்டத்துடன் ரூ.25 கோடி பரிசு: வோன்ட்ரோசோவா சாதனை!

Published On:

| By christopher

Marketa Vondrousova Makes History of won Wimbledon final

நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் செக் குடியரசு வீராங்கனை வோன்ட்ரோசோவா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் உலகின் மிகப்பெரிய போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று இரவு மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உலக தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர், 42-வது இடத்தில் உள்ள செக் குடியரசு வீராங்கனை மார்கெட்டா வோன்ட்ரோசோவாவும் மோதினர்.

பெரும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் வோன்ட்ரோசோ 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபியரை வீழ்த்தினார்.

தொடர் முழுவதும் தனது அபாரமான பார்மை வெளிப்படுத்திய மார்கெட்டா பரபரப்பான இறுதி ஆட்டத்தில் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

சாம்பியன் பட்டத்துடன் பரிசுத்தொகையாக 2.35 மில்லியன் பவுண்டு அதாவது இந்திய மதிப்பில் சுமார் 25 கோடியை பெற்றுள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வியுற்ற ஆன்ஸ் ஜாபியர் இந்திய மதிப்பில் 11.75 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

சந்திரயான் 3 விண்கலம் எவ்வளவு தூரம் சென்றுள்ளது? : அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

சுற்றுச்சூழல் அமைச்சர் தொடங்கி வைக்கும் ஈஷாவின் விவசாய கருத்தரங்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share