மனுபாக்கருக்கும் நீரஜ் சோப்ராவுக்கும் கல்யாணமா? – தந்தை சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

பாரிஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் இரு வெண்கலப்பதக்கம் வென்ற மனுபாக்கரை ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா திருமணம் செய்து கொள்ளப் போவதாக தவவல் பரவி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை மனு பாக்கர் வென்று தந்தார். துப்பாக்கி சுடுதலில் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும், கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவிலும் இரு வெண்கல பதக்கங்களை மனு பாக்கர் வென்றார். அதே போல ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளி கைப்பற்றினார். தொடர்ந்து, ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா, மனு பாக்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

அரங்கில் ஒரு பக்கத்தில் நீரஜ் சோப்ராவும், மனு பாக்கரும் நின்று சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் நின்று கொண்டிருந்த பாணி மற்றும் பேசிய விதம் ஆகியவற்றை வைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதோடு, மனு பாக்கரின் தாய் சுமேதா, நீரஜ் சோப்ராவுடன் சகஜமாக பேசிக் கொண்டிருந்தார்.

இந்த வீடியோவை வைத்து தனது மகளுக்கு அவர் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனவும், ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றவரை பேசி முடிக்க முயற்சி செய்கிறார் எனவும் நெட்டிசன்கள் வேடிக்கையாக கூறி வருகின்றனர்.  இந்தியாவில் ஒரு ஆணும், பெண்ணும் சிரித்து பேசினால் காதல், திருமணம் என பேசும் வழக்கம் இருக்கிறது” என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், மனுபாக்கரின் தந்தை , இன்னும் தனது மகள் திருமண வயதை எட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

-எம். குமரேசன் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்குமா?

41 வயதா? திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel