நடந்து கொண்டிருக்கும் பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை மூன்று வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
மனு பாக்கர் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மற்றும் 10 மீட்டர் கலப்பு துப்பாக்கிச் சுடுதல் பிரிவிலும் பதக்கம் வென்றது மூலம் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வாங்கிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். mansukh mandaviya
இந்த நிலையில், மல்யுத்த வீரரான வினேஷ் போகத், கஷ்டப்பட்டு பெண்களுக்கான 50 கிலோ மல்யுத்த போட்டியின் இறுதி சுற்றிற்கு வந்து சேர்ந்தார். போட்டியின் தொடக்கத்திற்கு முன் எடை பரிசோதனையின் போது, அவரது எடை 50 கிலோவைவிட 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதி ஒலிம்பிக் குழுவால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். mansukh mandaviya
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பதிலளித்த விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ” வினேஷ் போகத்தின் எடை 50.1 கிலோ இருந்தது. அதனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி பாரீஸில் இருக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி. உஷா விடம் பேசியுள்ளார். அவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் இந்திய அரசாங்கம் புகார் அளித்துள்ளது” என்றார்.
வினேஷ் போகத் தற்போது நீர்ச்சத்து குறைபாட்டின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் மேல் முறையீடு செய்யவிருப்பதாகவும் கூறினார்.
Sports Minister @mansukhmandviya gives Statement regarding disqualification of Vinesh Phogat in #ParisOlympics2024. #Olympic2024 #Olympics #Paris2024Olympic@IndiaSports #LokSabha
Watch Live : https://t.co/qlLdFVeqG6 pic.twitter.com/PY2aG6WpNo
— SansadTV (@sansad_tv) August 7, 2024
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வினேஷ் போகத்திற்கு வழங்கப்பட்ட வசதிகளின் முழு விவரங்களைக் கேட்டதற்கு, விளையாட்டுத் துறை அமைச்சர் பதிலளிக்காததாலும் இந்த விவகாரம் குறித்துப் பேச விடாததால் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வினேஷ் தகுதிநீக்கம்: எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பேச்சு : அப்பாவுக்கு சம்மன்!
வினேஷ் போகத் அதிகாரப்பூர்வமாக தகுதியிழப்பு: ஒலிம்பிக் விதிகள் சொல்வது என்ன?