மான்செஸ்டர் யுனைடெட் அணி பிரிட்டனில் மிகப் பெரிய கால்பந்து மைதானத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக, 20 ஆயிரம் கோடி செலவிடப்படவுள்ளது.
உலகின் முன்னணி கிளப் கால்பந்து அணிகளில் இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனெடெட் அணி முக்கியமானது. மான்செஸ்டர் நகரில் மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி என இரு இங்கிலீஸ் பிரிமீயர் லீக் அணிகள் உள்ளன. இதில், மான்செஸ்டர் யுனைடெட் அணி உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட அணி ஆகும்.
போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ இந்த அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த அணிக்கு சொந்தமாக ஓல்டு டிராஃபோர்டு என்ற ஸ்டேடியம் உள்ளது. இந்த அணியின் ஹோம் கிரவுண்ட் இதுதான். இங்கு, 74 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணமுடியும். Man Utd confirms build a new stadium

தற்போது, அந்த அணிக்காக புதிய ஸ்டேடியத்தை கட்ட மான்செஸ்டர் யுனைடெட் அணி திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் ஒரு லட்சம் இருக்கைகள் இருக்கும். ஐரோப்பாவில் பார்சிலோனாவின் கேம்ப் நியூ மைதானத்துக்கு (1,05, 000 இருக்கைகள்) பிறகு இந்த மைதானம்தான் பெரிய மைதானமாக உருவாக்கப்படுகிறது. Man Utd confirms build a new stadium
முதல் உலகப் போரில் ஓல்டு டிராபோர்டு ஸ்டேடியம் கடும் சேதமடைந்தது. தொடர்ந்து, கடந்த 1910 ஆம் ஆண்டு ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போதிருந்து, மான்செஸ்டர் யுனைடெட் அணியின் ஹோம் கிரவுண்ட் இதுதான்.
ஏற்கனவே, லண்டனிலுள்ள வெம்ப்ளி மைதானம் 90 ஆயிரம் இருக்கைகள் கொண்டது. இந்த மைதானம் இங்கிலாந்து தேசிய அணியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். புதிய மைதானம் கட்டப்பட்ட பிறகு, 200 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். மான்செஸ்டர் நகரின் உயரமான கட்டடம் பீதம் டவர். இதன் உயரம் 169 மீட்டர். இதை விட மான்செஸ்டர் சிட்டி மைதானம் உயரமானதாக அமையும்.
குடை வடிவில் அமையவுள்ள இந்த மைதானத்தை 37 கி.மீ தொலைவில் இருந்து காண முடியும். புதிய மைதானம் கட்டப்பட்ட பிறகு, பிரிட்டனில் இந்த மைதானம்தான் மிகப் பெரிய மைதானமாக இருக்கும். Man Utd confirms build a new stadium