மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் பி.வி.சிந்து மற்றும் எச்.எஸ்.பிரணாய் இருவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மலேசியா மாஸ்டர்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று (மே 25) 2வது சுற்று (காலிறுதிக்கு முந்தைய சுற்று) போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீரர் எச்.எஸ்.பிரணாய் உலக பேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ஆல் இங்கிலாந்து தொடரின் சாம்பியனான சீனா வீரர் லி ஷி ஃபெங்கை 13-21, 21-16, 21-11 என்ற கணக்கில் தோற்கடித்தார். இதனால் காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரணாய் நாளை (மே 26) ஜப்பான் வீரர் கெண்டா உடன் மோத உள்ளார்.

தொடர்ந்து பெண்கள் ஒற்றையர் பிரிவில் களமிறங்கிய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அயா ஓஹோரியுடன் மோதினார். 40 நிமிடங்களில் பி.வி.சிந்து 21-16, 21-11 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களுக்குச் சொந்தக்காரரான பி.வி.சிந்து நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் சீனாவின் ஜாங் யி மானை எதிர்த்துக் களமிறங்க உள்ளார்.
மோனிஷா
செங்கோல் விவகாரத்தில் அரசியல் செய்வதற்கு எதுவும் இல்லை: நிர்மலா சீதாராமன்