மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிச் சுற்றில் பி.வி.சிந்து!

Published On:

| By indhu

Malaysia Masters Badminton: PV Sindhu in the final round!

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முன்னேறியுள்ளார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், ஆடவர் மற்றும் மகளிருக்கு 2 நபர்கள் சேர்ந்து விளையாடும் போட்டி, ஒற்றையர் போட்டி என தனித்தனியாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 6ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் ஒய் யு-விற்கு எதிராக களமிறங்கினார்.

Malaysia Masters Badminton: PV Sindhu in the final round!

இதில் உலகத் தரவரிசை பட்டியலில் 15-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து 21-13, 14-21, 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, தாய்லாந்து வீராங்கனை பூசானனை எதிர்க்கொண்டார்.

இந்த போட்டியின் முதல் செட்டில் 13-21 என்ற கணக்கில் பின்னடைவில் இருந்த பி.வி.சிந்து, அடுத்த இரு சுற்றுகளை 21-16, 21-12 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

இதன் காரணமாக தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

கோவை: மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் பலி… 3 பேர் மீது வழக்குப்பதிவு!

“அம்மா சொன்ன அந்த வார்த்தை” – ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் எமோஷனல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel