கடைசி நேரத்தில் மிட்செல் ஸ்டார்க் மிஸ்ஸிங்: ‘வீக்’ ஆன ஆஸ்திரேலியா அணியால் ரசிகர்கள் ஷாக்!

Published On:

| By Kumaresan M

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து அட்டாக் பந்து வீச்சாளர்கள் பேட் கம்மின்ஸ், ஜாஸ் ஹேஸ்லிவுட் ஆகியோர் காயம் காரணமாக இடம் பெறாத நிலையில் மிட்செல் ஸ்டார்க்கும் அணியில் இருந்து விலகியுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் கணுக்கால் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. மிட்செல் ஸ்டார்க் சொந்த காரணங்களுக்காகவும் ஜாஸ் ஹேஸில்வுட் முழங்கால் காயம் காரணமாகவும் அணியில் இடம் பெறவில்லை.

அணியின் முக்கியமான மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. இவர்களுக்கு பதிலாக ஸ்பென்ஸர் ஜான்சன், நாதன் எல்லிஸ், பென் ட்வார்சுயஸ் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளதால், மார்கோனிஸ் ஸ்டாயினிசும் அணியில் இல்லாத நிலையில், மிட்செல் மார்ஸும் முதுகுவலி காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இடம் பெறவில்லை.

பேட் கம்மின்ஸ் இடம் பெறாத நிலையில், ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார்.

ஐசிசி தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மட்டும் மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. 2013 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் பலவீனமான அணியை அனுப்ப வேண்டிய சூழலுக்கு ஆஸ்திரேலிய அணி தள்ளப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி : ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, சீன் அபோட், அலெக்ஸ் கேரி, ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுஷேன், மேத்யூ ஷார்ட் , ஜேக் பிரேசர்-மெக்கர்க், தன்வீர் சங்கா, ஸ்பென்ஸர் ஜான்சன், நாதன் எல்லிஸ் , பென் ட்வார்சுயஸ், ஜோஸ் இன்க்லீஸ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share