ஜெயவர்தனே ரிட்டர்ன்ஸ்: MI அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்!

Published On:

| By Selvam

மகிளா ஜெயவர்தனே மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீமின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. மிகவும் வலுவான மும்பை இந்தியன்ஸ், இதுவரை ஐந்து முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஆனால், கடந்த 2021 ஐபிஎல் தொடரில் இருந்து தொடர் சறுக்கலில் உள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது, மும்பை இந்தியன்ஸ் லீக் சுற்று ஆட்டத்தில் வெளியேறியது.

இந்தநிலையில், 2017 – 2022 காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக இருந்த மகிளா ஜெயவர்தனவே மீண்டும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பயிற்சியாளராக உள்ள மார்க் பெளச்சர் நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயவர்தனே கூறும்போது, “மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ரசிகர்களின் அன்பை மேலும் வலுப்படுத்த தொடர்ந்து பயணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே நியமிக்கப்பட்டிருப்பது அந்த அளிக்கு புத்துணர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா மறைவு: தலைவர்கள் இரங்கல்!

ரிலாக்ஸ் விஜய் பதட்டத்தில் போலீஸ்… நேரடி ரிப்போர்ட்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share