அரசியலில் நுழைந்து அமைச்சர் ஆகலாம்… ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியுமா? – வினேசுக்கு மாமா கேள்வி!

Published On:

| By Kumaresan M

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், பாரீஸ் ஒலிம்பிக்கில் எடை அதிகரிப்புக் காரணமாகத் தங்கப் பதக்கத்துக்கான இறுதிப் போட்டிக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். வினேஷ் போகத்தின் வருத்தத்தில் நாடே பங்கெடுத்தது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் வினேஷ் போகத்.

தற்போது, அவர் அரசியலில் நுழைந்து புதிய வாழ்க்கையை தொடங்கியுள்ளார். அதாவது, ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியில் அவர் சேர்ந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஜூலானா தொகுதியில் வினேஷ் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், வினேஷ் போகத்தின் மாமாவும் முன்னாள் பயிற்சியாளருமான மாகவீர் போகத், வினேஷ் அரசியலில் நுழைந்ததற்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மகாவீர் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கலாம். நான் உள்பட நாட்டு மக்கள் அனைவரும் அதைத்தான் எதிர்பார்க்கிறோம்.

இதற்காக, தயார் செய்வதை விட்டு விட்டு அரசியலில் நுழைந்து என்ன பயன்? அரசியலில் நுழைந்து எம்.எல்.ஏ ஆகலாம் … அமைச்சர் ஆகலாம் ஆனால், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல முடியுமா? எனது மகள் சங்கீதா போகத் இப்போதே லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தயராகி வருகிறார். அவர் நிச்சயமாக லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார்.

மேலும், ஹரியானா முதல்வர் பூபேந்திர கூடா வினேஷ் போகத் மனம் உடைந்த தருணத்தை பயன்படுத்தி அவருக்கு ஆறுதலாக இருப்பது போல காட்டி  கொண்டு அரசியலுக்குள் இழுத்து சென்றுள்ளார். முதலில் வினேஷுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணமே கிடையாது என்றும் மகாவீர் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்பு : மாணவர்கள் தவிப்பு!

பெரம்பலூர் – ஆத்தூர் 4 வழிச் சாலைத் திட்டம் : அருண் நேரு எம்.பி கோரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share